மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் யூனிட் வீக்காக உள்ளதால் ஜெய்தேவ் உனாத்கத்தை ஆடவைக்கலாம் என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயின் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் பல முறை கோப்பையை வென்ற சாம்பியனான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சிஎஸ்கே அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை பவுலிங் யூனிட் பலவீனமாக இருக்கும் நிலையில் அதில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வீரேந்திர சேவாக் பரிந்துரைத்துள்ளார். பென்சில் உட்கார வைத்த ஜெய்தேவ் உனாத்கத்தை ஆட வைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவிற்கு சரியான பார்ட்னர் கிடைக்கவில்லை. பாசில் தம்பி, டேனியல் சாம்ஸு அந்த அளவிற்கு செயல்படவில்லை. கடந்த ஆண்டு நாதன் குரு போன்ற வீரர்கள் இருந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.