யாஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டியது.
புயல் காரணமாக கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முன்னதாக மாவட்டம் முழுவதும் நேற்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து சாலையில் விழுந்தன.
பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுத்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அணைகளில் இருந்து ஏற்கனவே தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் இந்த மழையால் விளைநிலங்கள் அனைத்தும் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.