Categories
மாநில செய்திகள்

புயலால் தொடர்மழை… பெரும் பாதிப்பு ஏற்படும்… தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி வரை மழையின் தீவிரம் இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக பெய்து கொண்டிருக்கும் தொடர் கனமழையால் சென்னை மக்களின் குடி நீருக்கு ஆதாரமாக உள்ள நீர்த் தேக்கங்களில் 90% நிறைந்துவிட்டன. இதனை அடுத்து வருகின்ற 5ஆம் தேதி வரை மழையின் தீவிரம் இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் நீர் நிலைகளை கண்காணிக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |