Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

புயலால் மூடப்பட்ட விமான நிலையம் – வெளியான முக்கிய அறிவிப்பு …!!

நிவர் புயல் காரணமாக நேற்று மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்க இருக்கின்றது.

நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்திருந்தது. தற்போது புயல் கடந்த பிறகு மழை சற்று அதிகமாக இருப்பதனால் 7 மணியில் இருந்து சென்னை விமான நிலையம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. டெல்லி, அகமதாபாத் மற்றும் அந்தமான் செல்லக்கூடிய பல விமானங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளை விமான நிலையம் வரத் தொடங்கி விட்டார்கள். அவர்களிடம் பாதுகாப்பு சோதனையை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

தற்போது காற்று வீசுவதால் விமானத்தை இயக்குவது சம்பந்தமாக அதிகாரிகள் ஆலோசனை நடத்திய  9 மணிக்கு பிறகு விமான போக்குவரத்து சேவையை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு சில விமான நிறுவனம் பகல் 12 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது பெரிய ரக விமானங்கள் அனைத்தும் 9 மணியில் இருந்து செயல்பட தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |