ஒடிசா மாநிலத்தில் குலாப் புயலின் பொழுது பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான இந்த குலாப் புயல், ஆந்திராவில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்த பெயரை பக்கத்து நாடான பாகிஸ்தான் வழங்கியது. குலாப் என்றால் ரோஜா என்று பொருள். குலாப் புயல் ஒடிசாவில் பலத்த காற்று, கனமழை, நிலச்சரிவு என்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நாற்பத்தி ஒரு கர்ப்பிணிகள் பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட காரணத்தினால், தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கஞ்சம் மாவட்டத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.