Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயலின் எதிரொலி.. சென்னை மக்களுக்கு ஆபத்து… உஷாரா இருங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

சென்னையில் தொடர் மழை காரணமாக காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் நிவர் புயல் காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மலை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மாநகர முழுவதிலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. அதனால் சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் இரவு நேரத்தில் கடும் குளிர் இருக்கும். அதன் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் எளிதாக காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேவையான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்கும் போது சூடாகவே பயன்படுத்த வேண்டும் என்றும் அப்போது தான் குடிநீரில் உள்ள கிருமிகளிலிருந்து நோய் பரவாமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

Categories

Tech |