தமிழக அரசு புயலை விட வேகமாக செயல்பட்டது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. புயல் காரணமாக மின் துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு தற்போது வரை 15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் புயலால் 2,488 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. இனி வருகின்ற காலங்களில் புயல் மற்றும் மழை பாதிக்காத வகையில் புதைவட மின்கம்பங்கள் அமைக்கப்பட உள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் 95 சதவீத மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் முழுமையாக மின் வினியோகம் செய்யப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.