அமெரிக்காவில் புயலிலும் தீப்பிடித்த காரிலும் இருந்து தப்பித்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ப்ளோரிடாவில் கடந்த வாரம் புயல் ஒன்று உருவாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதில் மரங்கள், மின்சார கம்பிகள் ஆகியவை சாலைகளில் விழுந்து கிடந்தன. இந்நிலையில் Valentina Tomashosky (17) என்ற சிறுமி சென்ற காரின் மீது மின்சார கம்பி மோதியதில் கார் தீப்பற்றியது. கார் எரிய தொடங்கியதும் அச்சமடைந்த அந்த பெண் காரிலிருந்து இறங்கி ஓட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கே அறுந்து விழுந்து கிடந்த மின்சார கம்பியின் மீது கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனிடையே சாலையில் சென்ற நபர் அவரை காப்பாற்ற முயற்ச்சி செய்து அவரும் தூக்கி வீசப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மின்சார ஊழியர்களை அழைத்துக் கொண்டு விரைந்து வந்தனர். மின்சாரத்தை துண்டித்த பிறகு அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Valentina Tomashosky புயலில் தப்பி கார் தீப்பிடித்து மின்சாரம் தாக்கி இறந்ததை பார்த்தால் எவ்வளவு முயற்சி செய்தாலும் விதி தான் வெல்லும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.