வெள்ளத்தில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஜாலியாக பாட்டு பாடி படகில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் தேங்கியுள்ள அதிகளவில் நீர் தேங்கியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் பெரும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சாலையில் தேங்கியுள்ள நீரில் படகு வைத்து பயணித்துள்ளார்.
அப்போது அவர் “என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்” என்று பாட்டு பாடி ஜோராக படகில் பயணித்துள்ளார். இதனைப் பார்த்த மன்சூர் அலிகானின் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையதளத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.