Categories
மாநில செய்திகள்

புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி கடல் வரை புயலாகவே நீடிக்கும். அதனால் டிசம்பர் 3 ஆம் தேதி தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலை எதிர்த்து போராட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண முகாம்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |