மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மழைநீர் தேங்குதல், மரம் விழுதல் உள்ளிட்ட புகார்களுக்கு சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, அவசர உதவி எண் 1913, 044-25619206, உ 044-25619207, 044-25619208 மற்றும் 9445477205 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். நிவாரண முகாம்கள், மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.