Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை: தமிழக மாவட்டங்களுக்கு அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது.

கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 121 பாதுகாப்பு மையங்கள், 5,093 நிவாரண முகாம்கள் தாயார் நிலையில்  உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |