Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலியால் விடுமுறை… மாற்று பணி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இருந்தாலும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் குறையாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி நாளாக டிசம்பர் 19ஆம் தேதி பணிபுரிய வேண்டும்.

அத்தியாவசிய பணிகள், பேரிடர் மேலாண்மை மற்றும் கொரோனா பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |