தமிழகத்தில் புயல் காரணமாக பால் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஆவின் நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை இடையே இன்று புயல் கரையை கடக்க உள்ளதால் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் இவர் புயலால் பால் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் நகரின் பிரதான பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1800 425 3300, 9345660380, 9566860286, 9384092349 என்ற எண்களுக்கு அழைத்தே பால் தேவை குறித்து மக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.