புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மணிக்கே 11 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புயலின் பாதையில் தற்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை.
மேலும் புயல் காரணமாக இன்று பிற்பகல் முதல் கடலில் அலைகள் 23 அடி வரை உயரும். புதுச்சேரி அருகே இன்று இரவு 8 மணிக்கு மேல் புயல் கரையைக் கடக்க தொடங்கும். அது மட்டுமன்றி புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை தொடரும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது