Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்புக்கு உதவ தயார்…. மக்களே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த சில  மணி நேரத்திற்குள் இது நிறைவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய தமிழக பாஜக தொண்டர்கள் தயாராக உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். உங்கள் குறைகளை 9150021831, 9150021832, 9150021833 என்ற தொலைபேசி எங்களுக்கு அழைத்து தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளார். புயல் பாதிப்புக்கு உதவ பாஜக முதலில் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |