அமெரிக்காவில் வணிகக்கப்பல் ஒன்று புயலில் சிக்கியதில் கவிழ்ந்து பலர் கடலுக்குள் மூழ்கியதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதிக்கு அருகில் ஒரு வணிக கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோரக்காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின்பு கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி துரிதப் படுத்தப்பட்டது.
இது ஒரு நபர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் 12 நபர்களை மீட்கும் பணியில் கடலோரக்காவல் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் காற்று மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது.
இதனால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றாலும் கூட மீட்பு பணி தொடர்ந்து துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.