கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.24ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தீபாவளி அன்று (அக்.24) தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், பொதுமக்கள் புத்தாடை அணிந்து வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.