Categories
தேசிய செய்திகள்

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ஜெ சந்திரசூடன் மறைவு…. இரங்கல்…!!!!

ஆர்எஸ்பி மூத்த தலைவர் பேராசிரியர் டி.ஜே சந்திரசூடன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இவர் கேரளா மாநில அளவிலும் தேசிய அளவில் இடதுசாரி அரசியல் கட்சி நடவடிக்கைகளில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக முக்கிய வகித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இவர் மாணவர் பருவத்திலேயே இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அப்போது முதலே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார். புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளராக 1975 ஆம் வருடம் தேர்வு செய்யப்பட்டார். கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய மறைவிற்கு கேரளா முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |