புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பல முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாள் அன்று திதி செய்து வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் என கூறப்படுகின்றது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலில் இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூட்டம் வரும்.
இதனால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் ஒரு பகுதியான மூன்றாம் பிரகாரம், சுவாமி சன்னதி பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம் என பல இடங்களில் பக்தர்கள் வரிசையில் நின்று செல்லும் வகையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருக்கின்றது. மேலும் பக்தர்கள் வரிசையில் நின்று தீர்த்தமாட கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து வடக்கு கோபுர வாசல் வரையிலும் தடுப்பு கம்புகள் கட்டப்படிருக்கின்றது. மேலும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.