புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. சென்னை தியாகராயநகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக அமைந்துள்ள பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி இன்று காலையில் சுப்ரபாதம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.