திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவிலுக்கு சென்று சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், பேச்சியம்மன், தளவாய் மாடன், தூசி மாடன் மற்றும் பரிவார தேவதைகளை வழிபட்டினர்.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிக்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே புனரமைப்பு பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.