பழனி முருகன் கோவிலில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு அடிவாரம், பாத விநாயகர் கோவில், ரோப்கார், மலைக்கோவில், மின் இழுவை ரயில் இந்திரம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மேலும் புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜையும், முன்னதாக சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்துள்ளனர்.