Categories
ஆன்மிகம் கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு….. குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்திப்பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

Categories

Tech |