பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கல்யாணமாகி ஒரு மாதம் முடிவடைந்த பிறகும் தற்போது வரை இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு தான் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரவீந்தரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். இந்நிலையில் நடிகை மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார். நள்ளிரவில் கணவரோடு சேர்ந்து பிரியாணி சாப்பிடும் அவர், “புரட்டாசி முடிஞ்சு, அன்னைக்கு ராத்திரியே பிரியாணி சாப்பிடுவது தனி பீலிங். என்னோட சேர்ந்து எல்லா அநியாயமும் செய்யுற கணவர் ரவீந்தருக்கு நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.