Categories
மாநில செய்திகள்

புரட்டிப் போட்ட நிவர் புயல்… நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்… என்னென்ன தெரியுமா..?

புயலில் சேதமடைந்த வீடுகள் மனிதர்கள் விலங்குகள் ஆகியவற்றுக்கு நிவாரணம் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணாமலை அருகே மையம் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

புயல் கரையை கடந்தாலும் முற்றிலுமாக ஓயவில்லை. மேலும், தீவிர புயலாக இருந்த நிவர் புயல், புயலாக வலுவிழந்தது. இந்த நிலையில், நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதேபோல, புயலின்போது 61 மாடுகளும் 5 எருதுகளும் 65 கன்றுகளும் 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கும் 3 ஆயிரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சேதமடைந்துள்ள வீடுகளுக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |