Categories
மாநில செய்திகள்

‘புராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம்…. தமிழக அரசின் மாஸ் திட்டம்….!!!!

தமிழகத்தின் பல இடங்களில் பெண் குழந்தைகளை வன்கொடுமைகள் படுத்துவதாக பல செய்திகள், தினந்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதைத் தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், பெண் குழந்தைகளுக்கான சரியான பாதுகாப்பு எதுவும் கிடைக்காமல் உள்ளது. மேலும் பல இடங்களில் உள்ள பெண் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி அறியாமலேயே இருக்கின்றனர். எனவே இந்த நிலைமையிலிருந்து பெண் குழந்தைகளுக்கான குற்றங்களை தடுப்பதற்காக, ‘புராஜக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டம் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தை கோவை மாவட்ட காவல்துறையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து கோவை ரூரல் எஸ்.பி.பத்ரி நாராயணன் கூறியுள்ளதாவது, இந்த திட்டம் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும். மேலும் இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு உட்கோட்டத்திலும் உள்ள பள்ளி தலைமையாசிரியர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு கூட்டம் நடத்தப்படுவதாகவும், மேலும் அவர்களுக்குரிய பயிற்சியை, பயிற்சி பெற்ற பெண் போலீசார் கொடுப்பார்கள். மேலும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படுகின்ற  வன்கொடுமைகளை பற்றி எப்படி, போலீசிடம் சொல்ல வேண்டும் என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையடுத்து கோவையில் செயல்படும் 997-பள்ளிகளிலும் இந்த பயிற்சியினை குழந்தைகள் விழிப்புணர்வு அடையும் வகையில் அளிக்கப்பட உள்ளது. மேலும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு , அடிப்படையான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி  ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்றால் என்ன என்பது பற்றியும், மேலும் ஒருவர் தவறாக நெருங்கினால், அந்த நபரிடம் இருந்து எப்படி தப்பிப்பது மற்றும் யாரிடம் புகார் தெரிவிப்பது போன்ற விவரங்கள் பற்றியும் சொல்லித்தரப்படுகிறது. மேலும் இவ்வாறு  குற்றங்கள் நடந்த ‘ஹாட் ஸ்பாட்’ கிராமங்கள் அடையாளம் கண்டு, அங்கு இருக்கும் பள்ளிகளில் முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த பயிற்சியானது  தொடங்கப்படும்.

Categories

Tech |