Categories
அரசியல்

புரிஞ்சிக்கோங்க அண்ணாமலை….. குஜராத்திலும் மின்வெட்டு இருக்கு…. செந்தில் பாலாஜி பதிலடி….!!!!

சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் வினியோகம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 2019ஆம் ஆண்டு 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளிலும் 16 ஆயிரம் மெகாவாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 17 நாட்களில் 16000 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பழுது ஏற்பட்ட இடங்களை உடனே சரி செய்ய வேண்டும் என அந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றோம். இந்நிலையில் ஒருவாரமாக 57 ஆயிரம் டன் நிலக்கரி வந்து கொண்டிருக்கின்றது.

இதனை அதிகப்படுத்த ஒன்றிய  அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கின்றோம். மேலும் குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் பற்றி எதுவுமே தெரியாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு யூனிட் 12 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ததால் காரணமாக மின்தடை ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த காலங்களைவிட 37 சதவீதம் மின்சாரம்  அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் ஏப்ரல், மே மாதத்திற்கு முன் கூட்டியே 3000 மெகாவாட் கொள்முதல் செய்ய கோரப்பட்டிருக்கின்றது. சூரிய மின்சக்தி 222 மெகாவாட் தான் இருந்தது.ஆனால்  தற்போது ஒரு ஆண்டில் 137 மெகாவாட் உயர்ந்துள்ளது.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் 6200 மெகாவாட் சொந்த உற்பத்தி செய்யப்படும். மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றால் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Categories

Tech |