செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை பகுதியில் ஏன் இந்த மழை தண்ணீர் தேக்கம் என்று நம் நிதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். ஏரியாவிற்குள் வர சொல்லுங்கள். முதலில் நிதி அமைச்சர் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும், அங்கே தொகுதியில் என்ன பிரச்சனை ? என்று பார்க்க வேண்டும். என்னவென்றால் மழை பெய்தது என்றால்….
இப்போது மழை அடர்த்தியாக மழை பெய்கிறது, அரை மணி நேரத்தில் மழை பெய்தது என்றால்…. 10 மணி நேரத்தில் பெய்ய வேண்டிய மழை அரை மணி நேரம், முக்கால் மணி நேரத்தில் பெய்து விடுகிறது. அப்போது தண்ணீர் வடிகால் அமைக்கின்ற வழிகள் கிடையாது. ஆனால் இப்போது மீனாட்சி அம்மன் கோவில் கிட்ட பாருங்கள்… முன்னால் தெப்பமாக கிடைக்கும், இப்போது மழை பெய்தால் தெப்பம் மாதிரி இருக்கும். ஆனால் 10, 20 நிமிடத்தில் தண்ணீர் சென்றுவிடும். காரணம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் எடுக்கப்பட்ட நடைமுறைகள்.
நான்கு முறை உலக அளவில்.. இந்திய அளவில்… சிறந்த தூய்மையான கோவில் நிர்வாகம் என்று பெயர்பட்டது மீனாட்சி அம்மன் கோவில். எத்தனையோ திருக்கோவில் இருக்கிறது. காரணம் என்னவென்றால்… ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி. மீனாட்சி அம்மன் கோவில் போகிறவர்களுக்கு தெரியும். முன்னாள் எல்லாம் சித்தர் வீதி எப்படி இருந்தது ? ஆடி வீதி எப்படி இருந்தது ? இன்றைக்கு ஆடி வீதி எப்படி உள்ளது? அதனுடைய சுற்றுப்புறம் எப்படி உள்ளது? எவ்வளவு வசதி செய்யப்பட்டுள்ளது? உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியும்.
அதே மாதிரி மஹால், பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்திருக்கின்ற விளக்கு தூண் இதையெல்லாம் சாலைகளில் பாருங்கள், அந்த நான்கு மாசி வீதிகள் சென்றால்… ஓர் இடத்தில் குண்டும் குழியுமாக உள்ளதா ? என்று பார்க்க வேண்டும். இதுதான் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் எடுக்கப்பட்டது எல்லா பணிகளும் கிடையாது அதை அவர் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்.