Categories
உலக செய்திகள்

புருவத்தை அழகாக்க செஞ்ச வேலையால்…. இப்ப காடு மாதிரி வளருது….. ரூ.1 லட்சம் போச்சே….!!!!!

இங்கிலாந்தில் வசிக்கும் இசபெல் குட்சி என்ற இளம்பெண், தனது புருவங்களை அழகாக்க விரும்பியுள்ளார். இதனால் இவர் அடிக்கடி புருவத்தை ட்ரிம் செய்ததால் புருவத்தில் உள்ள அடர்த்தி கம்மியாக தொடங்கியுள்ளது. எனவே அதற்கு நிறைய மெடிக்கல் ரெமிடிஸை எடுத்துக்கொண்டார், இருப்பினும் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் தான் அமெரிக்காவில் புருவத்தை மாற்றும் அறுவை சிகிச்சை குறித்த விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அங்கு சென்ற அவர் இந்திய மதிப்பில் ரூபாய் 1.4 லட்சம் அளவிற்கு செலவு செய்து ‘ட்ரான்ஸ்ப்ளான்ட்’ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சையானது, இசபெல்லின் தலையின் பின்பகுதியில் இருந்து தனித்தனியான மயிர்க்கால்களை (முடிகளை) எடுத்து, மூன்று மணி நேரத்தில் மருத்துவர்கள் கையால், புருவத்தில் தேவையான இடங்களில் அதனை அட்டாச் செய்யப்படும் முறையாகும். இந்த சிகிச்சை முடிந்த பின்னர், சுமார் இரண்டு வாரங்களுக்கு புருவத்தை தொடவோ, கழுவவோ கூடாது.

மேலும் ஐந்து மாதங்களுக்கு பிறகு தான் புருவத்தில் முடி வளரத் தொடங்கும், அதன் பிறகு எட்டு மாதங்களில் இதன் வளர்ச்சி முழுமையடையும். சிகிச்சை முடிந்த நிலையில் தனது புருவங்கள் இனி அடர்த்தியாக வளரும் என்ற பூரிப்பில் இசபெல்லா இருந்தார். ஆனால் தற்போது, தனது தலைமுடியை போல் புருவத்தில் முடி வேகமாக வளர்ந்து வருவதால், மிகவும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அந்த முடியை வெட்ட மிகவும் சிரமமாக இருப்பதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

Categories

Tech |