தற்போது பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்கும் நிலையில் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரை கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அறிந்ததும் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு மண்டபத்தில் கல்யாணத்தை நிறுத்துவதற்காக வருகின்றார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்து விடுகின்றது. ராதிகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டுவதை பார்த்த ஈஸ்வரி பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்து சாபம் விடுகின்றார். உன்னை பற்றி நன்றாகத்தான் புரிந்து வைத்து பாக்கியா விவாகரத்து கொடுத்திருக்கின்றார். இவ்வளவு நாள் பாக்கியாவை எதிரியாக நினைத்த ஈஸ்வரி தற்போது கோபியின் கீழ்த்தரமான செயலை பார்த்து நொறுங்கிப் போய் உள்ளார்.
மேலும் மகள் இனியா தன் முன்பே கோபி ராதிகாவின் மகளுக்கு முத்தமிடுகின்றார். இதை இனியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் இனிய கோபியை தூக்கி எறியும் அளவிற்கு வந்து விடுகின்றார். இதனால் இனியாவை சமாதானப்படுத்த கோபி முயற்சிக்கும்போது ராதிகா முறைக்கின்றார். பின் ஈஸ்வரி கோபி மற்றும் ராதிகா திருமணத்திற்கு சாபமிடுகின்றார். இதை பார்த்த ராதிகா தாங்கிக் கொள்ள முடியாமல் கோபியை தீண்டி விடுகின்றார். பின் ஆத்திரத்தில் கோபியை திட்டி விட்டு மேடையில் இருந்து இறங்கி விடுகின்றார்.
பாக்கியா ஈஸ்வரியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்கின்றார். அப்போது கோபியின் முன்பு ஈஸ்வரி தன்னுடைய மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கு நீ தேவையில்லை. எனக்கு மகனே என நினைத்து கொள்கிறேன் என ஆத்திரமாக பேசுகின்றார். இதனால் கோபி ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சிக்கும்போது இனி என்னால் இந்த மண்டபத்தில் அசிங்கப்பட முடியாது என கிளம்ப முடிவெடுக்கின்றார். இதன்பின் மண்டபத்திலிருந்து பாக்யா வெளியேறும் பொழுது அவரை வெறுப்பேற்றும் வகையில் ராதிகா புருஷன் கையை இறுக்கமாக பிடிக்கின்றனர். இதன் பின்னர் தான் கொடூரமான வில்லியாக உருவெடுக்கும் ராதிகாவை காட்டப் போகின்றார்கள்.