முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி ஆகிய நகரங்களுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார். அந்நிகழ்ச்சியில் முதல்வர் தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார். திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னிடம் பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின், அவர் கட்சிக்காரர்களை அவருடன் பேசுவதிலே. அந்த கட்சியை ஓபிஎஸ் அணி, இபிஎஸ் சனி என பிளவு பட்டு கிடக்கிறது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி என தொடர்ந்து தோல்வி மட்டுமே சந்தித்து வருகிறது. இதில் அவரது காட்சிகாரர்களே அவருடன் பேசாத போது திமுக எம்எல்ஏக்கள் தன்னோடு பேசுவதாக புருடா விட்டுக் கொண்டிருக்கிறார். இப்போதும் அவர் வகிப்பதை டெம்பரவரி பதவி. அதுவே உறுதியாகாத போது திமுகவை பற்றி விமர்சித்து இருக்கிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இதனை திருமணம் மாநாடு என குறிப்பிட்டு இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அமைச்சரவை மூர்த்தி பொதுக்கூட்டம், அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப் பிரமாண்டமாக தான் செய்வார், தானி முத்திரை பதிப்பார். அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்கு பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் திருமணத்தை நடத்தியுள்ளார். ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கக்கூடிய வகையில் செயல்பட கூடியவர் பி.மூர்த்தி. அமைச்சரவை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முடிவு எடுத்தோம். அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் பதவி வழங்குவது என யோசித்து அச்சத்தோடு தான் வணிகவரித்துறை கொடுத்தோம். அச்சப்பட்டோம் ஆனால் பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாக செயல்படுகிறார். இப்போது நிதி சுமை உள்ளது. தற்போது வணிகத்துறை வரலாற்றில் ரூ.13,913 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலர்களின் கட்டுப்பாடு அறை, திங்கள் தோறும் பதிவுத்துறையை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது