புரேவி புயலினால் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான புரேவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது நாளை பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் தர்மா விடுமுறை அறிவித்துள்ளார். காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தற்போது புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.