Categories
மாநில செய்திகள்

புரோக்கர்கள் பிடியில் அரசு மருத்துவமனையா…. புலம்பித் தவிக்கும் மக்கள்…!!!!!

தருமபுரி மாவட்டம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கி மாவட்டமாக உள்ள இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி சார்ந்த பணிகளே அதிகமாக உள்ளது.  தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு வேலைத் தேடி மக்கள் செல்கின்றனர். மருத்துவ ரீதியான பிரச்சனைகளுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையை நாடியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனை தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனையாக இருந்தது. அப்போது 385 படுக்கைகளுடன் 35 டாக்டர்களும் 62 செவிலியர்களும் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டது.  தற்போது தர்மபுரி மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகைகள் வசதிகொண்ட மிகப்பெரும் மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இங்கே பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தினந்தோறும்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புற  நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு ஆண்டில் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஒரு மாதத்தில் சராசரியாக 800 பிரசவங்கள் இங்கு நடைபெறுகிறது. மேலும் மாதத்திற்கு சராசரியாக 500 சிசேரியன் சிகிச்சைகள் நடைபெறுகிறது. இந்த மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்குகள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மகப்பேறு மருத்துவத்திற்கு என தனியாக வளாகம் அமைக்கப்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சையினை பெற்ற அறிவை அரங்குகளும் உள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தர்மபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் வசதி இல்லாத நோயாளிகளை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இங்கு போதிய மருத்துவர்கள் இல்லை என உரிய சிகிச்சை கிடைக்காது என்று தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அப்படி நோயாளிகளை அனுப்பிவைக்கும் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தனியார் மருத்துவர்கள் சிகிச்சைக்காக நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுக்கிறார்களாம் மேலும் அதேபோல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும்பாலும் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருக்கின்றனர். அவர்களை சொந்த மருத்துவமனைக்கு வரச் சொல்லி சிகிச்சை அளிக்கின்றனர்.

இதனால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை ஊழியர்களும் மருத்துவர்களும் அலைக்கழித்து நோயாளியின் மனதை மாற்றி அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அரசிடம் சம்பளம் வாங்கி விட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ஒரு சில ஊழியர்கள்  மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தர்மபுரி அரசு மருத்துவமனை அமைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |