32 லட்ச ரூபாய் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் செங்குத்தா நகரில் வசிக்கும் மனிஷா என்பவர் அப்பகுதியில் மழலைகள் பள்ளியில் நடத்தி வருகிறார். இவர் சொந்தமாக வீடு கட்ட முடிவு எடுத்து மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த நில புரோக்கர் மாரியப்பன் என்பவரை அணுகினார். அப்போது காளபட்டியில் விற்பனைக்கு இருக்கும் ஒரு பிளாட்டை வாங்கி வீடு கட்டி தருவதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மனிஷா பல்வேறு தவணைகளாக மாரியப்பனின் வங்கி கணக்கிற்கு 32 லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் மாரியப்பன் காளப்பட்டியில் இடம் எதுவும் வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மனிஷா பணத்தை திரும்பி தருமாறு கேட்டதற்கு மாரியப்பன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மாரியப்பன், அவரது மனைவி அன்புச்செல்வி ஆகியோரின் இணைந்து பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மாரியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.