மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டாவிற்கு மாஸ்க்கும் பிரியாணிக்கு சானிடைசரும் இலவசமாக வழங்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மதுரை திருநகரில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புரோட்டா வாங்குவோருக்கு மாஸ்க் மற்றும் பிரியாணி வாங்குவோருக்கு சானிடைசர் இலவசமாக வழங்கப்படுகின்றன. 12 புரோட்டாவுக்கு இரண்டு மாஸ்களும் மூன்று பிரியாணி பாக்கெட்டுகளுக்கு 50மிலி சானிடைசருடன் உடன் மூன்று மாஸ்க்களும் வழங்கப்படுகின்றன. இப்படி வாங்கும் உணவு வகைகளுக்கு ஏற்றவாறு கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.