Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புரோமோவில் விஜய் செய்த காரியம்”… ரசிகர்களை கவர்ந்த சேட்டை…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் புரோமோ வீடியோவில் விஜய் செய்த காரியம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கின்றது.

அந்தப்புரோமோவில் பூஜா ஹெக்டே பயமாக இருந்தால் என் கையை வேணும்னா பிடிச்சுக்கோங்க சார்ன்னு சொல்ல அதற்கு விஜய் நான் வேணும்னா உன் இடுப்ப புடிச்சிகிட்டுமா என வில்லங்கமாக கேட்கின்றார். மேலும் அதில் உங்கள காப்பாத்தணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என மீண்டும் விஜய் வில்லங்கமாக பேசியுள்ளார். நெல்சன் என் பட ட்ரெய்லர் மற்றும் ப்ரோமோவில் ஒன்று இருக்கும் ஆனால் படத்தில் வேறு ஒன்று இருக்கும் என கூறியுள்ளார். அதனால் ப்ரோமோவில் விஜய் பேசியதை வைத்து அவசரப்படாமல் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கூறுகிறார்கள் ரசிகர்கள்.

Categories

Tech |