மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தை கட்சி என பல்வேறு கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் போராட்டமானது குடியரசு தின விழாவில் தமிழக வீரர்களின் வாகன ஊர்வலங்களை புறக்கணித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்தப் போராட்டத்தில் திராவிட கழக மாவட்டத் தலைவர் திருப்பதி, ம.தி.மு.க. நகர செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ரவி, தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சதுரகிரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.