எளாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எளாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கடற்கரையில் இருந்து 12.40 மணிக்கு சூளூர்பேட்டை வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து 2.35 மணிக்கு சூளூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரையும், சூலூர் பேட்டையில் இருந்து 3.10மணிக்கு சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும்.