Categories
மாநில செய்திகள்

“புறநகர் ரயிலில் இருந்து தவறிவிழுந்த பெண் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் இழப்பீடு”… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 8 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

சென்னையில் வசிக்கும் தனது தாயை சந்திக்க இந்திராணி என்ற பெண் திண்டுக்கலில் இருந்து புறநகர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து மரண இழப்பீடு கோரி ரயில்வே தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பயணச்சீட்டு தொலைந்ததன் காரணமாக அவர் பயணியில்லை எனக் கூறி தீர்ப்பாயம் கோரிக்கையை நிராகரித்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எம்.எஸ்.சுப்பிரமணியம் விசாரணை செய்தார். அப்போது பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமை எனவும், கதவுகள் இல்லாத புறநகர் ரயில்களில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாகவும் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் கூறி இழப்பீடு வழங்குவதை தடுக்க முடியாது என நீதிபதி கூறினார். போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு  என்று அவர் கூறினார். மேலும் பெண்ணின் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Categories

Tech |