Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புறநகர் ரயில்களில் அனைத்து பெண்கள், குழந்தைகள் பயணிக்கலாம்

சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடு இன்றி பெண்கள், குழந்தைகள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

கொரனா பரவல்   காரணமாக ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை கடந்த அக்டோபர் 5-ம்  தேதி சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முதலில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடின்றி பெண்கள் குழந்தைகள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதைபோல்  சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் வரை இயக்கப்படும் ரயில் சேவை நாளை முதல் தொடங்கும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |