Categories
சென்னை மாநில செய்திகள்

புறநகர் ரயில்கள் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி சூலூர் பேட்டை அருகே கலங்கிய நீர் தேக்கத்தில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சூளூர்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள்,பாதுகாப்பு காரணங்களுக்காக கும்மிடிபூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |