மும்பையில் மத்திய அரசின் உத்தரவை எதிர்நோக்கி ரயில்வே இயக்கம் தொடர்ந்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து முடங்கிக் கிடக்கும் நிலையில், மும்பையில் இன்றியமையாப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அரசு அலுவலர்களுக்காக நாள்தோறும் 350 புறநகர் ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கான போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பயணச்சீட்டுகளில் உள்ள கியூ ஆர் குறியீட்டைக் கண்டறியும் எந்திரங்களை மும்பை சிஎஸ்டி உள்ளிட்ட 15 நிலையங்களில் நிறுவியிருக்கிறது
மேலும் நுழைவாயில்களில் வெப்பநிலை கண்டறியும் சாதனங்களையும் பொருத்தியுள்ளது. பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்தைத் தொடங்க மாநில அரசு ரயில்வே துறைக்கு வேண்டுகோள் கொடுத்திருப்பதால் அதை உள்துறைக்கு அனுப்பி நிலைமையை மதிப்பிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.