சென்னையில் புறநகர் ரயில் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்ட்ரல் – கூடூர், எனாவூர் – கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிபூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து 2: 35க்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிபூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் என கூறியுள்ளது.
சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 3.10-க்கு சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும். சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 5.15-க்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.