Categories
மாநில செய்திகள்

புறம்போக்கு நிலத்தில் அரசு கட்டிடமா…? மாவட்ட ஆட்சியருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் ஏரி, ரேடியோ பூங்கா போன்ற இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையங்களுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது என அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனார் பண்டாரி நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ஏழுமலை அளித்த புகார் பற்றி மாவட்ட ஆட்சியர் விரைவாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆக்கிரமிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் முடிவு எடுத்தால் ஆவின் நிறுவனம் கட்டுமானங்களை தொடரலாம் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |