திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 கிராமங்களில் ஏறி மற்றும் ரேடியோ பூங்கா ஆகிய இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலைகளுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். இது குறித்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏழுமலை அளித்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் விரைவாக பரிசலீத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையடுத்து ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்தால் ஆவின் நிறுவனம் கட்டுமானங்களை தொடரலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.