Categories
Uncategorized

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு…. பொதுமக்கள் சாலை மறியலால் திடீர் பரபரப்பு….!!

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் நத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பாப்பாந்தாங்கள் கிராமத்தை ஒட்டி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமாராக 10 பேருக்கு பசுமை வீடு கட்ட அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வீடு கட்டுவதற்காக நிலத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட காலணியில் வசித்து வரும் பொது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் செய்யார்-ஆற்காடு சாலையில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது அவர்கள் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷமும் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மோரணம் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

Categories

Tech |