Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

புற்களை அப்புறப்படுத்திய வாலிபர்….. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டப்பனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த கோவிந்தராஜ் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் 60 அடி ஆழமுடைய விவசாய கிணற்றை சுற்றி முளைத்திருந்த புல்லை கோவிந்தராஜ் அப்புறப்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கோவிந்தராஜ் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோவிந்தராஜின் உடலை மீட்டனர். பின்னர் கோவிந்தராஜின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |