Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் அவதிப்படும் பெற்றோர்…. மோசடி செய்த தாய், மகள்…. போலீஸ் விசாரணை…!!

பணம் மற்றும் நகையை மோசடி செய்த தாய் மற்றும் மகள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜன் நகரில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் மனுவில், தனது பெற்றோர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரை பார்ப்பதற்காக கீதா அடிக்கடி அங்கு செல்வதால் பக்கத்துக்கு வீட்டிலுள்ள மேரி மற்றும் ஜூலியானாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கீதாவின் பெற்றோருக்கு மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்படும் நிலையில் மேரி மற்றும் ஜூலியானா வங்கியில் நகை கடன் வாங்கி தருவதாக கூறி, கீதாவின் தாயை வங்கிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சென்று கீதாவின் தாயிடமிருந்து ரூ.8.8 லட்சத்தையும், 22 பவுன் தங்க நகையையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். எனவே மேரி மற்றும் ஜூலியானா மீது நடவடிக்கை எடுத்து நகையை மீட்டு தர வேண்டும் என கீதா அந்த மனுவில் குறிபிட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |