Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புற்றுநோயால் உயிரிழந்த நடிகர்…. கோல்டன் குளோப்ஸ் விருது இவருக்கு தான்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!

2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் க்ளோப் சிறப்பு நடிகருக்கான விருதினை புற்றுநோயால் உயிரிழந்த சாட்விக் போஸ்மேன் வென்றுள்ளார்.

சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப்ஸ் என்ற விருதை வென்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜார்ஜ்சி உல்பி இயக்கத்தில் வெளிவந்த மா ரெயினியிஸ் பாட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது பட்டியலில் தி கிரவுன் என்ற திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் 6 விருதுகளை பரிந்துரைத்த நிலையில் 4 விருதினை இப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நோமாட்லேண்ட்  என்ற படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட்டது. அப்படத்தின் இயக்குனரான க்ளோஸ்யிஸ் ஜாவோவிற்கு விருது வழங்கப்பட்டது.இவர் சிறந்த இயக்குனருக்கான விருதினை வென்ற முதல் ஆசிய அமெரிக்க பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்பரா ஸ்ட்றைசாண்ட் யென்ட் படத்திற்காக இயக்குனர் விருது வென்றதிலிருந்து, தற்போது அறிவிக்கப்பட்ட இயக்குனருக்கான விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் க்லொஸியஸ் ஜாவோ அடைந்துள்ளார். முதல்முறையாக கோல்டன் குளோப் விருதுகளில் 3 பெண்மணிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சின்னத்திரையில் சிறப்பாக நடித்ததற்காக ஜோஸ் ஓ கானர், எம்மா கோரின் மற்றும் கில்லியன் அண்டர்சன் விருதினை வென்றுள்ளனர்.

கொரோனா பரவலால் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்திய நிலையில் பொது விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்.இதைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கத்திய சினிமா விருதுகள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளில் முக்கியமான விருதாக கோல்டன் க்ளோப் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28ஆம் தேதி  நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோல்டன் க்ளோப் விருது விழா நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் அனைத்து விருது வழங்கும் விழாவின் தொடக்கப்புள்ளியாக கோல்டன் க்ளோப் கருதப்படுகிறது. கொரோனாவின் காரணத்தால் படப்பிடிப்புகள், திரைப்பட தயாரிப்புகள் தடைபட்டுள்ளது. திரையரங்குகள் மோடி உள்ளதாலும் அடுத்த வருடத்திற்கு எந்ததெந்த, திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை என அக்கூட்டத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |